Search This Blog

Wednesday, August 30, 2023

Sai Baba Message 31/08/23


 *பாபாவின் கதைகளை பயபக்தியுடன் கேளுங்கள் ! துன்பமும் துயரமும் நீங்கி வாழ்வு மேம்படும் !*

_*"பூர்வஜன்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே பாபாவின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும்.  பாபாவின் கதைகள்  பயபக்தியுடன்  கேட்கப்பட்டால், துக்கமும் மோஹமும் அனர்த்தமும் , கேடுகளும்,  துன்பமும் துயரமும் நிவிர்த்தியாகும்;  பக்தரின் வாழ்வு மேம்படும்."*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, August 16, 2023

Sai Baba Message 17/08/23

 


*குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நமக்கு நலல்தே நடக்கும் !*

_*குருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப்  போன்றது.  குருவின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும்.  குருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் கவலைப்படாதீர்கள் ! பயப்படாதீர்கள் ‌! குருவின் மீது  திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் !*_

- ஸ்ரீகுரு சரித்திரம்


Wednesday, August 9, 2023

Sai Baba Message 10/08/23


 *இந்த மசூதி ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை !*

_*இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை.  இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே நலத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார்.  நீங்கள் ஒவ்வொருவரும் இதை அனுபவத்தில் காண்பீர்கள்.  இந்த துவாரகாமாயியின் மசூதிக்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.  இங்கு வந்த உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக !*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

Wednesday, August 2, 2023

Sai Baba Message 03/08/23

 *ஸ்ரீசாய் சத்சரித்திரம் எனும் தேவலோக அமிர்தம் !*



_*"அனுதினமும் காலையிலோ, மாலையிலோ, இரவிலோ ஸ்ரீஸாயீ சத்சரித்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.  நீங்கள் ஒவ்வொரு நாளும் பாபாவுக்கு மலர்கள் சமர்ப்பணம் செய்யாமல் இருந்திருக்கலாம்,  நீராட்டுவதற்கு மறந்திருக்கலாம்,  எத்தனையோ பூஜை புனஸ்காரங்களை, நியம நிஷ்டைகளையும் மறந்து போயிருக்கலாம்.   ஆனால்,  ஸ்ரீஸாயீ சத்சரித்திர பாராயணம் செய்யும் நேரத்தை மட்டும் என்றுமே மறக்காதீர்கள்.  எந்த பாக்கியவானின் உதடுகளுக்கு,  இந்த தேவலோக அமிர்தத்தையொத்த ஆத்ம போதனையான ஸ்ரீஸாயீ சத்சரிதம் பாராயணம் வாசிக்க வருகிறதோ,  அவர் மூன்று விதமான தாபங்களையும் உடனே கடந்துவிடுவார் ;  மோட்சம் அவரது பாதங்களை தேடி நாடிவரும் !"*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்