உங்களுடனே நான் இருக்கும்போது நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை !
எதை எதையோ சாதிக்க வேண்டுமென்ற உத்தேசத்தால், வீணான முயற்சிகள் செய்யவேண்டாம். விரதங்கள், தீட்சைகள், ஹடயோகங்கள், உபவாச தீட்சைகள், உடலை வருத்தும் யாத்திரைகள் போன்ற முயற்சிகளைச் செய்து களைத்துப் போகாதீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றவே நான் அவதரித்துள்ளேன். உங்களுடனேயே நான் எப்பொழுதும் இருக்கிறேன். உங்களுடன் நான் இவ்விதமாக இருக்கையில், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? எதற்காகத் தேடுகிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை. நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள் !
- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
No comments:
Post a Comment