Search This Blog

Wednesday, June 25, 2025

Sai Baba Message

www.youtube.com/@neshaganesh

 உங்களுடனே நான் இருக்கும்போது நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை !

எதை எதையோ சாதிக்க வேண்டுமென்ற உத்தேசத்தால்,  வீணான முயற்சிகள் செய்யவேண்டாம். விரதங்கள், தீட்சைகள்,  ஹடயோகங்கள், உபவாச தீட்சைகள், உடலை வருத்தும் யாத்திரைகள்  போன்ற முயற்சிகளைச் செய்து களைத்துப் போகாதீர்கள்.  உங்கள் தேவைகளை நிறைவேற்றவே நான் அவதரித்துள்ளேன். உங்களுடனேயே நான் எப்பொழுதும் இருக்கிறேன். உங்களுடன் நான் இவ்விதமாக இருக்கையில், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? எதற்காகத் தேடுகிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை.  நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள் !

- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி

Sai Nesha Groups
www.youtube.com/@neshaganesh

Wednesday, June 11, 2025

Sai Baba Message

 பயம் கொள்ளாதீர்கள்; நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்  !


கலியுகத்தில் பக்தர்களது பாதுகாவலராகவும், அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே.  பக்தர்கள் அனைவருக்கும் இவர் கூறிய ஒரே போதனை, "பயம் கொள்ளாதீர்கள் ; நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன் !".  இதற்கு கைம்மாறாக பக்தர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, "திட நம்பிக்கை மற்றும் பொறுமை !". இவ்விரண்டும்  தன்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களிடமிருந்து அவருக்கு குறைவின்றி கிடைத்தன.

- பாபாவின் பொன்மொழி பூஜ்யஶ்ரீ நரசிம்ம சுவாமிகள்

Sai Nesha Groups
www.youtube.com/@neshaganesh