22 ஓம் ஆராக்ய க்ஷோமதாய நமஹ
ஒருவர் நிம்மதியாக வாழ்வதற்கு,
முதலில் வேண்டுவது நோயின்மை;
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அடுத்தபடியாக உணவு,
உடை தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகள் கிட்ட வேண்டும்.
தமது பக்தன் இல்லத்தில் எந்த விதமான தேவையும் இருக்காது. என பாபா ஆணித்தரமாக உறுதியளிக்கிறார்.
ஏதாவது ஒரு பக்தனுக்கோ,அவனைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கோ நோய் ஏற்படுமானால்,
பாபா உடனடியாக நிவாரணமளிக்கிறார்.
எல்லா பக்தர்களுமே நோயில்லாமல் அமைதியான வாழ்க்கை நடத்த பாபா வழி வகுத்து உதவுகிறார்.
அவரே உறுதியளித்தபடி மகாசமாதி க்குப் பின்னரும்,இன்றும் பாபா தமது சமாதியிலிருந்து இயங்கிக்கொண்டு பக்தர்களின் நலனை பேணி வருகிறார்.
பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ. ஸ்வாமிஜி அருளிய அஷ்டோத்திரம் 🌸
விளக்கம் எஸ். சேஷாத்திரி 🙏