Search This Blog

Sunday, September 17, 2023

ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி

 *"ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி"*



எழுதியவர்:

ஸ்ரீதாஸ்கணுமஹாராஜ்.

(இயற்பெயர் : கண்பத்ராவ் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே)

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவைப் போற்றிப் புகழும் *"ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி"* என்ற ஸ்துதிமாலை, 

 பாபா சீரடியில் வாழ்ந்த போதே,  *"1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி , அதாவது விநாயகர் சதுர்த்தி தினம்  திங்கட்கிழமையன்று எழுதி முடிக்கப்பட்டது.*"

_இதற்குப்பின் 37 தினங்களில், அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பாபா மஹாசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது._

_*இந்த ஸ்ரீசாயிநாத‌ ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையில் 146 முதல் 156 வரை உள்ள ஸ்லோகங்கள்,  இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி படிப்பவர்கள் அடையப்போகும் நன்மைகளைப் பற்றி விரிவுபட கூறப்பட்டுள்ளது.*_

தினந்தோறும் தவறாமல் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட வேண்டிய புனிதநூல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஆகும்.

இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையானது  ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண ஆசியையும் அருளையும் பெற்ற ஓர் அற்புதமான ஸ்துதியாகும்.


எனவே, சாய் பக்தர்கள் அனைவரும் தவறாமல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரியை தொடர்ந்து பாராயணம் செய்யும்படியும்,  தினமும் நித்யபாராயணம் செய்யும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




முக்கியக் குறிப்பு :


_*இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி பாராயணம் செய்துமுடித்த கையோடு, ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் காணிக்கையை ஸ்ரீ சாயிநாதருக்கு தட்சணையாக செலுத்தி, உங்கள் பிரார்த்தனைகளை அவருடைய திருவடிகளில் சமர்ப்பணம் செய்யுங்கள். அப்படிச் செய்வதினால் பாராயணம் செய்த பலனை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.  இது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பதுவும் நிச்சயம்.*_

அதேநாள் இன்று...

_*"2023ம்‌ ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை !"*_

No comments:

Post a Comment