Search This Blog
Sunday, September 29, 2024
Wednesday, August 28, 2024
Sai Baba Message 29-08-2024
அமைதியாய் உட்கார் ! என்னையே தியானி ! !
வருவது வரட்டும் விட்டுவிடாதே ! உனது குருவான என்னையே உறுதியாக பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும் சதாசர்வகாலமும் ஒன்றியும் இருப்பாய்!
Saturday, December 16, 2023
Wednesday, October 25, 2023
Sai Baba Message 26/10/23
*பாபாவின் பக்தி மங்களங்கள் உண்டாக்கும் !*
_*அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால் சிலர் ஆரம்பகாலத்தில் பாபாவின் திருவாய்மொழியை மணக்கோணலுடன் உதாசீனப்படுத்தி நஷ்டத்திற்கு ஆளாவார்கள் . ஆயினும், பின்னர் பாபாவின் மீது பக்தியுடன் நம்பிக்கையும் விசுவாசமும் ஏற்பட்டால் , மங்களங்கள் விளையும்.*_
- ஸ்ரீசாய் சத்சரித்திரம்
Wednesday, October 11, 2023
Sai Baba Message 12/10/23
*நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கும் ஸ்ரீசாய் சத்சரித்திரம் !*
_*பாபாவின் பாத தீர்த்தமாகிய சத்சரித்திரம் எனும் கதை அமிர்தத்தை நம்முடைய நித்தியமங்களம் கருதி தினமும் பருகினால் நம் உடலும் உள்ளமும் தூய்மையாகும் !*_
- ஸ்ரீசாய் சத்சரித்திரம்
Wednesday, September 20, 2023
Sai Baba Message 21/09/23
*நம்மையும் நம் வாழ்வையும் பரிசுத்தமாக்கும் "சாயி" நாமஜெபம் !*._*நம்மையும் நம் வாழ்வையும் பரிசுத்தமாக்கிக்கொள்ள "சாயி" நாமஜெபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. "சாயி" நாமமே நாக்குக்கு அணிகலன். "சாயி" நாமமே ஆன்மீக வாழ்வைச் செழிப்பாக்கும் உரம். "சாயி" நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. "சாயி" நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திர விதிகளுக்கும் உட்பட்டதன்று. "சாயி" நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். "சாயி" நாமம் என்றும் எப்பொழுதும் புனிதமானது.*_
- ஸ்ரீசாய் சத்சரித்திரம்
_*ஓம்ஸாயீ ஸ்ரீஸாயீ ஜெயஜெயஸாயீ ஓம்ஸாயீ ஸ்ரீஸாயீ ஜெயஜெயஸாயீ ஓம்ஸாயீ ஸ்ரீஸாயீ ஜெயஜெயஸாயீ!*_
Sunday, September 17, 2023
ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி
*"ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி"*
எழுதியவர்:
ஸ்ரீதாஸ்கணுமஹாராஜ்.
(இயற்பெயர் : கண்பத்ராவ் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே)
ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவைப் போற்றிப் புகழும் *"ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி"* என்ற ஸ்துதிமாலை,
பாபா சீரடியில் வாழ்ந்த போதே, *"1918-ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி , அதாவது விநாயகர் சதுர்த்தி தினம் திங்கட்கிழமையன்று எழுதி முடிக்கப்பட்டது.*"
_இதற்குப்பின் 37 தினங்களில், அக்டோபர் 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பாபா மஹாசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது._
_*இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையில் 146 முதல் 156 வரை உள்ள ஸ்லோகங்கள், இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி படிப்பவர்கள் அடையப்போகும் நன்மைகளைப் பற்றி விரிவுபட கூறப்பட்டுள்ளது.*_
தினந்தோறும் தவறாமல் தொடர்ந்து பாராயணம் செய்யப்பட வேண்டிய புனிதநூல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஆகும்.
இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி ஸ்துதிமாலையானது ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண ஆசியையும் அருளையும் பெற்ற ஓர் அற்புதமான ஸ்துதியாகும்.
எனவே, சாய் பக்தர்கள் அனைவரும் தவறாமல் இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரியை தொடர்ந்து பாராயணம் செய்யும்படியும், தினமும் நித்யபாராயணம் செய்யும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முக்கியக் குறிப்பு :
_*இந்த ஸ்ரீசாயிநாத ஸ்தவனமஞ்சரி பாராயணம் செய்துமுடித்த கையோடு, ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் காணிக்கையை ஸ்ரீ சாயிநாதருக்கு தட்சணையாக செலுத்தி, உங்கள் பிரார்த்தனைகளை அவருடைய திருவடிகளில் சமர்ப்பணம் செய்யுங்கள். அப்படிச் செய்வதினால் பாராயணம் செய்த பலனை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள் என்பது நிச்சயம். இது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பதுவும் நிச்சயம்.*_
அதேநாள் இன்று...
_*"2023ம் ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை !"*_

