Search This Blog
Wednesday, July 26, 2023
Sai Baba Message 27/07/23
*பாபா ! எங்களுக்கு உங்களுடைய பரிபூரண ஆசியை அளியுங்கள் !*
_*ஓ.. ஸாயீ..! சோகத்தில் மூழ்கியிருக்கும் எங்களுடைய மனத்தில் இருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள். அடைய முடியாததை அடைவதற்கு எங்களுக்கு உதவி செய்யுங்கள் பாபா! நாங்கள் ஒரே கஷ்டப்படுகிறோமே! எங்களுக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா? உலகில் எங்கெங்கோ யாத்திரையெல்லாம் சென்றுவிட்டு, இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சீரடிக்கு வந்திருக்கிறோம். எங்களிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது ?. எங்களைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி, ஏக்கத்தால் வெம்பிப்போக செய்யவேண்டும் ? இப்பொழுதாவது எங்கள் மீது கிருபையுடன் கடாட்க்ஷம் செய்யுங்கள் ! எங்களுக்கு உங்களுடைய பரிபூரண ஆசியை அளியுங்கள்!*_
- ஸ்ரீ சாயி சத்சரித்திரம்
( *பாபாவைக் காண வந்த ஒரு பக்தருக்காக மாதவ்ராவ் பாபாவிடம் வேண்டியது. நாமும் இவ்வாறே பாபாவிடம் வேண்டிக் கொள்வோமாக!* )
Wednesday, July 12, 2023
Sai Baba Message 13/07/23
*பாபாவின் வார்த்தைகளே பலன்தரும் நம்பிக்கையின் அஸ்திவாரம் !*
_*பாபாவின் வார்த்தைகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே அவரிடமிருந்து பெறும் பலனுக்கான அஸ்திவாரம். இங்கு சந்தேகம் என்பதற்கு துளியும் இடமில்லை !*_
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
Thursday, July 6, 2023
Sai Baba Message 06/07/23
*ஸ்ரீசாயி சத்சரித்திரம் ஓர் கர்மயோக போதனைத் தொகுப்பு !*
_*தீயன செய்யத் தூண்டும் கலியுக மயக்கங்களுக்கும், பேராசையால் விளையும் கவலைகளுக்கும் மத்தியில் மாட்டிக்கொள்ளாமல் நம்மைக் காக்கும் சக்தி வாய்ந்த, கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பெற்ற கர்மயோக போதனைத் தொகுப்பே சாயியின் சத்சரித்திரம்.*_
- ஸ்ரீசாயி சத்சரித்திரம்
( _*சாய் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீசாயி சத்சரித்திரத்தில் தினமும் ஒரு அத்தியாயம் தவறாமல் நித்யபாராயணம் செய்து பாபாவின் அனுக்ரஹத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள் !*_ )
Wednesday, June 7, 2023
Sai Baba Message 8/6/23
*உள்ளம் தூய்மையாக இருந்தால் எவ்விதக் கஷ்டமும் இல்லை !*
_*உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை. நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்? நீ உன் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?*_
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Wednesday, May 31, 2023
Sai Baba Message1/06/23
*கலியுகக் கெடுதல்கள் அத்தனையையும் அழிக்கும் திறமை கொண்ட ஒரே பெயர் ஸாயீ.. ஸாயீ.. ஸாயீ..!*
"யாவன்ன கீர்த்தயேத் ஸாயீ கலிகல்மஷ நாசனம் தாவத் திஷ்டதி தேஹேஸ்மின்;"
_*"கலியுகத்தில் எல்லாக் கெடுதல்களையும் அழிக்கும் திறமை கொண்ட ஒரே பெயர் ஸாயீ.. ஸாயீ.. ஸாயீ.. அப்பேர்ப்பட்ட ஸாயீநாதனின் பெயரை சாய்கீர்த்தனைகள் மூலம் ஒருவன் திரும்பத் திரும்ப கூறாதவரை, உடலுடன் இருந்தும் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கிறான்."*_
- ஸ்ரீசாயிநாத மனனம்
Thursday, May 25, 2023
Sai Baba Message 25/05/23
*"ஸாயீ" திருநாமத்தை வாயாரப்பாடி மனமாரத் துதியுங்கள் !*
_*ஓ.. ஸாயீ..! எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி மனமார துதிக்கிறானோ, அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாசம் செய்து அனுக்கிரஹம் செய்து அருள்பாலிக்கிறீர் பாபா !*_
- பாபாவின் ஆரத்தி பாடலில்















