அன்பு கலந்த பக்தியும், நம்பிக்கை நிறைந்த சரணாகதியுமே எனக்கு சந்தோஷம் !
"சிலர் என் பாதத்தில் பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து அர்ப்பணிக்கிறார்கள். உண்மையான பக்தி இல்லாத, செல்வச் செழிப்பின் அஹங்காரம் மட்டுமே நிறைந்த அந்த பரிசுகளை நான் எப்படி ஏற்பேன் ?. ஜெகன்நாதனாகிய எனக்கு அந்த பரிசுகள் தேவையா ? என்னைப்பற்றிய அவர்களின் அறியாமையை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. ஆனால் , பரிசுத்தமான பக்தி நிறைந்து கண்ணீர் மல்க, நம்பிக்கையோடு நீ என்னிடம் வந்து சரணாகதி செய்வதுதான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. அன்புடன் நீ அளிக்கும் ஒரு சிறு மலர், ஒரு கோப்பை தேநீர்தான் எனக்கு அத்தனை உயர் செல்வங்களைக் காட்டிலும் மேன்மையானதாக உணர்கிறேன்."
- ஸ்ரீ ஷீரடி சாய் பாபாவின் திருவாய்மொழி நல்லமுத்துக்களாக