Search This Blog

Wednesday, July 9, 2025

Sai Baba Message

 


குருவைத் தரிசித்த நாளே வாழ்வின் மிகச்சிறந்த நன்னாள் !

ஓ..ஸ்ரீகுருவே ! மானிடர்களாகிய நாங்கள் மூடர்கள். எங்களை மன்னித்து விடுங்கள் !. மாயையினால் அறியாமை என்ற இருட்டினில் மூழ்கிக்கிடந்து, உங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்துவிட்டோம். எங்கள் வாழ்விலேயே மிகச்சிறந்த நன்னாள் எதுவென்றால் உங்களைத் தரிசித்த இந்நாளே !.  நீங்கள் மாயைக்கு அப்பாற்பட்டவர் என்றும், சாட்சாத் பரப்பிரம்ம ரூபம் என்றும் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டோம். இன்று உங்கள் தரிசனத்தால் எங்கள் பாவங்களெல்லாம் அகன்றுவிட்டன.

- ஸ்ரீகுரு சரித்திரம்

சாய் பக்தர்கள் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் !