*உங்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறப்பார்கள் !*
ஸ்ரீகுரு : _*அம்மா ! நீ வருடக் கணக்கில் எனக்கு பூஜை செய்கிறாய். ஆனால், உன் கோரிக்கை என்னவென்று சொல்லவில்லையே? அது எதுவாக இருந்தாலும் என்னிடம் கேள்! அந்த மகேசனின் தயவில் நான் தீர்த்து வைக்கிறேன்.*_
கங்கா : _*சுவாமி ! நான் முற்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை! அதனால் எனக்கு இந்தப் பிறவியில் பிள்ளைப்பேறு இல்லை. எல்லோரும் என்னை மலடி என்று சொல்கிறார்கள். எனக்கு வயதும் 60 ஆகிவிட்டது. ஆகையால், அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் உங்களை சேவிக்கிறேன்.*_
ஸ்ரீகுரு : _*அம்மா ! உங்களுக்கு அடுத்த பிறவியில் குழந்தைகள் பிறந்தால் அது நான் கொடுத்த வரத்தால் என்று எப்படி உங்களால் நினைக்க முடியும்? ஆகையால், இப்பொழுதே இந்தப் பிறவியிலேயே உங்களுக்கு "ஒரு மகனும் மகளும் பிறப்பார்கள்" என்று ஆசீர்வதிக்கிறேன் !*_
- ஸ்ரீகுருசரித்திரம்
(தர்மம் தவறாமல் வாழ்ந்த பிராமணரின் பதிவிரதையான கங்கா எனும் 60 வயது அம்மையாருக்கும் ஸ்ரீகுருவுக்கும் நிகழ்ந்த உரையாடல். குருவின் மீது திடமான நம்பிக்கை இருந்தால் எதுவும் நடக்கும்