Search This Blog

Friday, April 7, 2017




(பிரதோஷ மகிமை)
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்ததேஷமானது.
பிரதோஷம் தோன்றிய கதை சாகா வரம் பெறுவாதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வலி தாங்காத வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. அச்சமயத்தில், கடலில் இருந்தும் விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காலம்' என்ற நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது. விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார். சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார். அந்த ஆலகால விஷத்தை ஒரு கணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான். இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்பு வரும் என்று கருதிய பார்வதி, விஷம் முழுவதும் சிசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தால். அன்றுமுதல் ஈசன், திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.
திரியோதசி நடனம் ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார். இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள்அனைவரும் 'ஹரஹர' என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பினர்.
அபிஷேகப் பொருட்கள் இறைவனுக்கும் நந்திதேவருக்கும் தேவையான அபிஷேகப் பொருட்களை வழங்குவதன் மூலம் நற்பலன்களை அடையலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
அபிஷேகப் பொருட்கள்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும், 
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்.
பழங்கள் - விளைச்சல் பெருகும்,
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்,
நெய் - முக்தி பேறு கிட்டும்
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்.
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் – சுகவாழ்வு,
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

No comments:

Post a Comment