Search This Blog

Wednesday, July 26, 2023

Sai Nesha Groups Magazine Digital India Issue-15













 

Sai Baba Message 27/07/23


 *பாபா !  எங்களுக்கு உங்களுடைய பரிபூரண ஆசியை அளியுங்கள் !*

_*ஓ.. ஸாயீ..! சோகத்தில் மூழ்கியிருக்கும் எங்களுடைய மனத்தில் இருக்கும் இடைவிடாத குடைச்சலை நிரந்தரமாக எடுத்தெறியுங்கள். அடைய முடியாததை அடைவதற்கு எங்களுக்கு உதவி செய்யுங்கள் பாபா!  நாங்கள் ஒரே கஷ்டப்படுகிறோமே! எங்களுக்கு நீங்கள் உபகாரம் செய்யக்கூடாதா? உலகில் எங்கெங்கோ யாத்திரையெல்லாம் சென்றுவிட்டு,  இப்பொழுது உங்களுடைய தரிசனத்திற்காக சீரடிக்கு வந்திருக்கிறோம். எங்களிடம் கருணை காட்டாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது ?. எங்களைமாத்திரம் ஏன் தனிமைப்படுத்தி, ஏக்கத்தால் வெம்பிப்போக செய்யவேண்டும் ? இப்பொழுதாவது எங்கள் மீது கிருபையுடன் கடாட்க்ஷம் செய்யுங்கள் ! எங்களுக்கு உங்களுடைய பரிபூரண ஆசியை அளியுங்கள்!*_

- ஸ்ரீ சாயி சத்சரித்திரம்

( *பாபாவைக் காண வந்த ஒரு பக்தருக்காக மாதவ்ராவ் பாபாவிடம் வேண்டியது.  நாமும் இவ்வாறே பாபாவிடம் வேண்டிக் கொள்வோமாக!* )

Wednesday, July 12, 2023

Sai Baba Message 13/07/23

 *பாபாவின் வார்த்தைகளே பலன்தரும் நம்பிக்கையின் அஸ்திவாரம் !*

_*பாபாவின் வார்த்தைகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே‌ அவரிடமிருந்து பெறும் பலனுக்கான அஸ்திவாரம்.  இங்கு சந்தேகம் என்பதற்கு துளியும் இடமில்லை !*_




- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Thursday, July 6, 2023

Sai Baba Message 06/07/23

 *ஸ்ரீசாயி சத்சரித்திரம் ஓர் கர்மயோக போதனைத் தொகுப்பு !*

_*தீயன செய்யத் தூண்டும் கலியுக மயக்கங்களுக்கும், பேராசையால் விளையும் கவலைகளுக்கும் மத்தியில் மாட்டிக்கொள்ளாமல் நம்மைக் காக்கும் சக்தி வாய்ந்த, கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பெற்ற கர்மயோக போதனைத் தொகுப்பே சாயியின் சத்சரித்திரம்.*_




- ஸ்ரீசாயி சத்சரித்திரம்

( _*சாய் பக்தர்கள் அனைவரும்  ஸ்ரீசாயி சத்சரித்திரத்தில் தினமும் ஒரு அத்தியாயம் தவறாமல் நித்யபாராயணம் செய்து பாபாவின் அனுக்ரஹத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுங்கள் !*_ )