Search This Blog

Wednesday, May 31, 2023

Sai Baba Message1/06/23

 *கலியுகக் கெடுதல்கள் அத்தனையையும் அழிக்கும் திறமை கொண்ட ஒரே பெயர் ஸாயீ.. ஸாயீ.. ஸாயீ..!*

"யாவன்ன கீர்த்தயேத்   ஸாயீ கலிகல்மஷ நாசனம் தாவத் திஷ்டதி தேஹேஸ்மின்;"

_*"கலியுகத்தில் எல்லாக்   கெடுதல்களையும்  அழிக்கும் திறமை கொண்ட ஒரே பெயர் ஸாயீ.. ஸாயீ.. ஸாயீ.. அப்பேர்ப்பட்ட ஸாயீநாதனின் பெயரை சாய்கீர்த்தனைகள் மூலம் ஒருவன் திரும்பத் திரும்ப  கூறாதவரை,  உடலுடன் இருந்தும் மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கிறான்."*_

- ஸ்ரீசாயிநாத மனனம்

Thursday, May 25, 2023

Sai Baba Message 25/05/23

 *"ஸாயீ"  திருநாமத்தை வாயாரப்பாடி மனமாரத் துதியுங்கள் !*

_*ஓ.. ஸாயீ..! எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி மனமார துதிக்கிறானோ, அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாசம் செய்து அனுக்கிரஹம் செய்து அருள்பாலிக்கிறீர் பாபா !*_

- பாபாவின் ஆரத்தி பாடலில்

Wednesday, May 17, 2023

Sai Baba Message 18/05/23

 *பாபாவால் காப்பாற்றப்படுவோம்  !*



_*"நேரம் மிகமிகக் கெட்டதாக இருந்த போதிலும், பாபாவின் மீதான நம்பிக்கையிலும் பக்தியிலும் பலம் இருந்தால் மட்டுமே,  நாம் பாபாவால் காப்பாற்றப்படுவோம் !"*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, May 10, 2023

Sai Baba Message 11/05/23

 *பாபாவின் பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டால் வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வராது  !*

_*பாபாவின் இரண்டு பாதங்களையும் இறுகப்பற்றிக் கொண்டவருடைய பாவங்கள் அனைத்தும் அழியும்.  பூர்வஜென்ம நல்வினைகளின் பலன்கள் மேல்தளத்திற்கு எழும்பும்.  வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வராது !*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Wednesday, May 3, 2023

Sai Baba Message 4/05/23

 


*பாபாவின் பாதங்களில் நம்பிக்கை வைப்பவர்கள் மிகச்சிறந்த வெற்றியை அடைவார்கள் !*

*கொடுப்பதிலும் வாங்குவதிலும் உட்காருவதிலும் எழுந்திருப்பதிலும் பேச்சிலும் சிந்தனையிலும்  எல்லாச் செயல்களிலும் எல்லா நேரங்களிலும் பாபாவின் பாதங்களில் நம்பிக்கை வைக்கும் அடியவர்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த வெற்றியை அடைவார்கள் என்பது உறுதி !*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்