Search This Blog

Wednesday, April 26, 2023

Sai Baba Message 27/04/23

 *சாயியின் சத்தியமான விரதம் !*

_*தன்னை மட்டுமே நம்பி சரணாகதி அடைந்த பக்தனுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல்  காப்பாற்றுவதே ஸாயீயினுடைய சத்தியமான விரதம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் !.*_


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

Thursday, April 13, 2023

Sai Baba Message 13/04/2023


 நீ என்னை பார்க்க முடியும்🙏

*நடந்து கொண்டிருப்பதை நடத்திவைப்பது  உன் உள்ளிருக்கும் நானே என்று நீ கண்டுகொண்டால் ஒரு  க்ஷண காலத்தில் நீ  என்னை பார்க்க முடியும்.நான் என்ற விஷயத்தை நீ மறந்த அதே வினாடியிலேயே  நானாகவே உன் முன்பாக இருப்பேன்.உன்னுடைய  ஆத்ம சொரூபமே  நான்.*

---ஷீரடி சாய்பாபா.

Wednesday, April 5, 2023

Sai Baba Message 6/04/23

 *உனக்கு நேரும் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள் !*

_*எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீரவேண்டும்.  "நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வ­லியாகவும், வேதனைகளாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?  மேலும்,  "துன்பத்தையும் வ­லியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும்.  ஆகவே, உனக்கு நேரும் இந்தத் துன்பத்தை இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே !*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா